'இனி லஞ்சம் கேட்டா வாட்ஸ்அப் பண்ணுங்க'...! - அரசு அதிகாரிகளுக்கு செக் வைத்த அதிரடி வாட்ஸ்அப் எண் அறிமுகம்...!
If you asked bribe use WhatsApp Introducing WhatsApp number that checks government officials
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கோரும் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கக்கூடிய புதிய வாட்ஸ்அப் உதவி எண்ணை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"அரசு அலுவலகங்களில் பணிகளை மேற்கொள்ளும் போது யாரேனும் லஞ்சம் கோரினால், அதுகுறித்த புகார்களை பொதுமக்கள் உடனுக்குடன் பதிவு செய்யும் வகையில் 9498180936 என்ற வாட்ஸ்அப் உதவி எண் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாட்ஸ்அப் உதவி எண் அனைத்து அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்றும், அதனுடன் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதள இணைப்பும் இணைக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதோடு, லஞ்சப் புகார்களை விரைவாகப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறையும் மேலும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
If you asked bribe use WhatsApp Introducing WhatsApp number that checks government officials