ஒரு நாள் முன்னதாக வெளியாகும் 'ஜன நாயகன்'? ஜூலை 23ம் தேதியே ஜன நாயகன் ரிலீஸ்!22ம் தேதி ஸ்பெஷல் ப்ரீமியர் இருக்குமா? - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாள் முன்னதாகவே, ஜூலை 23-ஆம் தேதி வியாழக்கிழமை படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல்கள் திரையுலக வட்டாரங்களில் பரவி வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் விரைவில் வெளியிடும் என்றும், அதனுடன் புதிய டிரெய்லரும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம், விஜய் நடித்த கடைசி திரைப்படமாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத், இந்தப் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.

இந்தப் படம் முதலில் இந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை நடைமுறைகள் காரணமாக வெளியீடு தாமதமானது. இறுதியாக பல மாற்றங்கள் மற்றும் மியூட் பரிந்துரைகளுக்குப் பிறகு, திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தணிக்கைச் சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்த வாரமே படத்தை வெளியிட தயாரிப்புக் குழு தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தேர்தலுக்கு முன்பாக படம் வெளியாகியிருந்தால், விஜயின் பெயருக்கு முன் "தளபதி" என்ற அடையாளம் இடம்பெற்றிருக்கும். ஆனால், தற்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பதால், திரைப்படத்தின் தொடக்கத்தில் அவருக்கான அடையாளம் எப்படி இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அது நடைபெறவில்லை. தற்போது ஜூலை 23-ஆம் தேதி வெளியீடு உறுதியாகலாம் என்ற தகவல் பரவுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

படம் வியாழக்கிழமை வெளியாகும் பட்சத்தில், தொடர் விடுமுறை காரணமாக நான்கு நாட்கள் உலகளவில் அதிக வசூல் ஈட்டும் வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.

மேலும், ஜூலை 22-ஆம் தேதி இரவு சிறப்பு பிரிமியர் காட்சிகள் நடைபெறுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இருப்பினும், 'ஜன நாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி, டிரெய்லர் வெளியீடு மற்றும் பிரிமியர் காட்சிகள் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, தற்போது வெளியாகும் தகவல்கள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரை உறுதி செய்யப்படாத தகவல்களாகவே கருதப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Jana Nayagan release a day early Jana Nayagan is set for release on July 23rd Will there be a special premiere on the 22nd


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->