பொதுமக்களுக்கு குட் நியூஸ்...! நாளை ஒரு நாள் மட்டும் எக்ஸ்ட்ரா டோக்கன்கள்...! - பத்திரப்பதிவுத் துறையின் சூப்பர் அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


ஆடி மாதம் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு எண்ணிக்கை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களில் ஆவணப் பதிவுகளுக்கான வருகை வழக்கத்தை விட அதிகரிப்பது இயல்பான ஒன்றாகும். இதனால், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அத்தகைய நாட்களில் கூடுதல் முன்பதிவு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஆடி மாதம் தொடங்க இருப்பதால், ஆனி மாதத்தின் இறுதி நாளான நாளை ஆவணப் பதிவுகள் அதிகளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கூடுதல் முன்பதிவு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒரு சார்பதிவாளர் பணியாற்றும் அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 முன்பதிவுகளுக்குப் பதிலாக 150 முன்பதிவுகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவுகளும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் வழக்கமான 100 சாதாரண முன்பதிவுகளுக்குப் பதிலாக 150 முன்பதிவுகள் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவுகளோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவுகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத் தொடக்கத்தையொட்டி ஆவணப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ள பொதுமக்கள், இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்திக் கொண்டு தங்களது பதிவுப் பணிகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Extra tokens tomorrow one day only Super announcement from Securities Registration Department


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->