கள்ளக்குறிச்சியில் நடுக்கத்தை ஏற்படுத்திய பெட்ரோல் குண்டு வீச்சு...! தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணன் உட்பட 4 பேர் கூண்டோடு கைது...!
Petrol bomb attack Kallakurichi causes panic 4 people including Balakrishnan who absconding arrested cage
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணிசாமி (28) மற்றும் சிறுவங்கூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (33) ஆகியோருக்கு கடந்த 7-ஆம் தேதி தேநீர் கடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் முன்விரோதமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவத்தின் போது பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து அந்தோணிசாமியை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்விரோதத்தை மனதில் வைத்திருந்த பாலகிருஷ்ணன், தனது நண்பர்கள் மூவருடன் நேற்று அதிகாலை அந்தோணிசாமியின் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டுகளை வீசி அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் வீட்டின் முன்பக்க கதவு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவலர்கள், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Petrol bomb attack Kallakurichi causes panic 4 people including Balakrishnan who absconding arrested cage