'அப்படி என்ன ஸ்பெஷல் இந்த லெனின் படத்துல'..? மெகா ஸ்டார் சிரஞ்சீவியே ஆவலுடன் காத்திருக்கும் அந்தப் படம்... வைரலாகும் பின்னணி...!
What so special about this Lenin film Mega Star Chiranjeevi eagerly waiting film background going viral
தெலுங்குத் திரையுலகின் இளம் நட்சத்திரமான அகில் அக்கினேனி நடித்துள்ள 'லெனின்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், மூத்த நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள பாராட்டு பதிவு திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.'ஹலோ', 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' போன்ற திரைப்படங்களில் நவீன நகரத்து இளைஞராகவும், 'ஏஜென்ட்' திரைப்படத்தில் உளவாளி கதாபாத்திரத்திலும் நடித்திருந்த அகில் அக்கினேனி, இந்த முறை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் கிராமத்து இளைஞராக ரசிகர்களை சந்தித்துள்ளார்.

அதிரடி மற்றும் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.இந்த திரைப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். முரளி கிஷோர் அப்பூரு இயக்கியுள்ள இந்தப் படத்தை அக்கினேனி நாகார்ஜுனாவும், சூரியதேவரா நாக வம்சியும் இணைந்து தயாரித்துள்ளனர்.
மேலும், நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'லெனின்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, இதுவரை 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பதிவில், "'லெனின்' திரைப்படம் குறித்து தொடர்ந்து சிறப்பான கருத்துகளை கேட்டு வருகிறேன். குறிப்பாக அகில் அக்கினேனியின் நடிப்புக்குக் கிடைத்து வரும் ஒருமித்த பாராட்டுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன.
அகில் எனக்கு இன்னொரு மகனைப் போன்றவர். ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் கலைஞராக வளர்ந்து வருவதை காண்பது பெருமையாக உள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், "எனது நீண்டநாள் நண்பரான நாகார்ஜுனாவுக்கும், இந்த திரைப்படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். 'லெனின்' திரைப்படத்தை விரைவில் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்.
இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து நீடிக்க என் வாழ்த்துகள்" என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.சிரஞ்சீவியின் இந்த பாராட்டு பதிவு, அகில் அக்கினேனி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
What so special about this Lenin film Mega Star Chiranjeevi eagerly waiting film background going viral