இசைக்குயிலுக்கு என்றும் அழியாத கௌரவம்...! முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது பாடகி எஸ்.ஜானகியின் உடல்...!
Eternal honor music industry Singer S Janaki body being buried full state honors
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் தனது இனிமையான குரலால் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் இதயங்களை வென்ற இசை அரசி எஸ். ஜானகி, வயது முதிர்வு காரணமாக 88-ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவு இசையுலகையே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.'ஜானகியம்மா', 'கானக் குயில்', 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்', 'இசை அரசி' என பல்வேறு சிறப்புப் பட்டங்களால் போற்றப்பட்ட எஸ். ஜானகி, தனது இசைப் பயணத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அழியாத தடம் பதித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் தனது குரலால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தவர்.அவரது இசைச் சாதனைகளுக்காக நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். மேலும், ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக நீண்ட அவரது இசைப் பயணம் இந்திய இசை வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு, தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க எஸ். ஜானகி மறுத்திருந்தார். தனது 55 ஆண்டுகால இசைப் பணிக்குப் பிறகு வழங்கப்பட்ட அந்த உயரிய விருது மிகவும் தாமதமாக வந்ததாக அவர் அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் இன்று அவரது உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது.
பின்னர் பிற்பகல் 3 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கனியனகுந்தி பகுதியில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.எஸ். ஜானகியின் மறைவு இந்திய திரையிசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது காலத்தால் அழியாத பாடல்கள், தலைமுறைகளைத் தாண்டியும் ரசிகர்களின் மனங்களில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
English Summary
Eternal honor music industry Singer S Janaki body being buried full state honors