'தென்னிந்தியாவின் கானக்குயில்' பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மா காலமானார்..!
Playback singer S Janaki Amma passes away
இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா உயிரிழந்துள்ளார். இன்று வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரது இறப்பு செய்தி சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவர் நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Playback singer S Janaki Amma passes away