வியட்நாமில் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு; 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்..!
The central government has released a list of 15 Indians who died in a boat accident in Vietnam
வியட்நாமில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், 10 நபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான ஹான் மே ருட் ங்வோய் தீவிற்கு இந்தியர்கள் உள்ளிட்ட 32 சுற்றுலா பயணிகள் மற்றும் 04 ஊழியர்கள் என மொத்தம் 35 பேருடன் இன்று காலை 11 மணியளவில் படகு ஒன்று புறப்பட்டது. அப்போது திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்து கடலில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வியட்நாம் மீட்புப் படையினர் 18 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும்,03 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும், 02 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; செந்தில் குமார் ஜெயவேல், முருகப்பிரபு அருமுகம், ஸ்ரீதர் சுந்தரராஜன், ஷேக் அப்துல்லா அப்துல் மஜீத், பாலாஜி நடேசன், வினய குமார் சிதாபுரம் பாஸ்கரா, ரவிசங்கர் சுகுமாரன், சந்தோஷ் குமார் ஷாந்திலால்ஜெயின், பாபு குப்புசாமி, அழகுராஜன் சிவசாமி ஆகியோர் உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்: நல்லபேட்ட அடிசேஷய்யா ரவிதேஜா, ஸ்ரீதர் முடியம், ஜெயலட்சுமி ஜெல்லி. கேரளாவைச் சேர்ந்தவர்கள்; அவிகோட் செரியான் தாமஸ், லோவேனி தாமஸ்.
English Summary
The central government has released a list of 15 Indians who died in a boat accident in Vietnam