விவாகரத்துக்கு பிறகு 2வது திருமணம்..தனது பட இயக்குநரையே ரகசியமாக கரம்பிடித்த ‘சுப்ரமணியபுரம்’ நடிகை சுவாதி!
Second marriage after divorce Subramaniapuram actress Swathi secretly ties the knot with her own film director
‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சுவாதி ரெட்டி, தனது பட இயக்குநரையே இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். பைலட் விகாஸ் வாசுவுடனான முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது ‘மந்த் ஆஃப் மது’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோடியை சுவாதி ரகசியமாக கரம்பிடித்துள்ளார்.
நடிகை சுவாதியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தனது திருமணம் குறித்து நீண்ட விளக்கம் எதையும் அளிக்காத சுவாதி, திருமணப் புகைப்படங்களை பகிர்ந்து, “திருமணமாகிவிட்டது” என ஒரே வார்த்தையில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சுவாதி ரெட்டி. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘மந்த் ஆஃப் மது’ திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கியிருந்தார்.
‘மந்த் ஆஃப் மது’ திரைப்படத்தில் பணியாற்றியபோது சுவாதிக்கும், இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோடிக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறிய நிலையில், இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சுவாதிக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு மலையாள பைலட்டான விகாஸ் வாசுவை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஓரளவு விலகியிருந்த சுவாதி, தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.
ஆனால் சில ஆண்டுகளிலேயே சுவாதி மற்றும் விகாஸ் வாசு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சுவாதி திடீரென நீக்கியது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு சுவாதி மற்றும் விகாஸ் வாசு விவாகரத்து பெற்றதாக கூறப்பட்டது. முதல் திருமணம் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிய சுவாதி, தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார்.
நடிகை சுவாதி முதன்முதலில் தெலுங்கில் வெளியான ‘டேஞ்சர்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு ‘ஆடவாரி மாடலகு அர்த்தாலே வேருலே’ திரைப்படத்தில் திரிஷாவின் தங்கையாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தெலுங்கு சினிமாவில் கவனம் பெற்ற சுவாதிக்கு தமிழில் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுவாதி நடித்த கதாபாத்திரமும், அவரது இயல்பான நடிப்பும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவிலும் சுவாதிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த அவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் எளிமையான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
முதல் திருமணத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக தலைகாட்டாமல் இருந்த சுவாதி, விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்த நிலையில்தான் தன்னை இயக்கிய ஸ்ரீகாந்த் நாகோடியுடன் காதல் மலர்ந்து, தற்போது அந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.
தனது படத்தின் இயக்குநரையே சுவாதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திருமணத்துக்குப் பிறகும் சுவாதி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Second marriage after divorce Subramaniapuram actress Swathi secretly ties the knot with her own film director