'சுப்ரமணியபுரம்' புகழ் பட நடிகை ஸ்வாதி ரெட்டிக்கு 02-வது திருமணம்; பிரபல இயக்குனர் மாப்பிள்ளை..!
Subramaniapuram fame actress Swathi Reddy marries for the second time
தமிழ் சினிமாவில் 'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்வாதி ரெட்டி.. இன்று அவரது திருமணம் நடைபெற்றது.
கடந்த 2005-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'டேன்ஞர்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்தவர் ஸ்வாதி ரெட்டி. தமிழில் 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் பெரிய அளவில் அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு ஜெய் உடன் இணைந்து 'கனிமொழி'
சசிகுமாருடன் 'போராளி' போன்ற படங்களில் நடித்தார். பின்னர் விஜய் சேதுபதியின் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'வடகறி', 'யட்சன்', 'யாக்கை' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான 'மன்த் ஆஃப் மது' என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு இவரது நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக நடிகை ஸ்வாதி ரெட்டி, 2018-ஆம் ஆண்டு பைலட்டான விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2022-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில், இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோத்தியை நடிகை ஸ்வேதா ரெட்டி இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Subramaniapuram fame actress Swathi Reddy marries for the second time