இந்தோனேஷியாவில் பெங்களூரு ஐஐஎம் வளாகம் அமைக்கப்படும்; பிரதமர் மோடி அறிவிப்பு..!
Prime Minister Modi announces that IIM Bangalore campus will be set up in Indonesia
பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம் ) இந்தோனேஷியாவில் தமது வளாகத்தை அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தோனேஷியாவில் அமைக்கப்படவுள்ள இந்த வளாகம், ஐஐஎம்-இன் முதலாவது சர்வதேச வளாகமாகும்.
அரசு முறை பயணமாக மூன்று நாட்கள் இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடனான கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் போது இதனை அறிவித்தார்.
அத்துடன், இந்த வளாகம் இந்தோனேஷியாவின் மலாங்கில் உள்ள ஷிங்கசாரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமையும் என்றும், இது இந்திய உயர்கல்விச் சூழலை சர்வதேச மயமாக்கலையொட்டிய சிறப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களின் உலகளாவிய விரிவாக்கத்தில் மற்றுமொரு சிறப்பு மைல்கல்லாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அதேப்போன்று துபாயில் அகமதாபாத் ஐஐஎம், அபுதாபியில் தில்லி ஐஐடி, சான்சிபாரில் சென்னை ஐஐடி ஆகியவற்றின் வளாகங்கள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வி, ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றில் உலகளாவிய திறனை மேம்படுத்த உறுதிபூண்டுள்ள நம்பத்தகுந்த உலகாளவிய அறிவுசார் கூட்டாளியாக வளர்ந்து வரும் இந்தியாவின் சூழலை இது சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
இது இந்தியா - இந்தோனேஷியா இடையேயான வளர்ந்து வரும் கூட்டாண்மையையும் உயர்தரமான கல்வியை உலக அளவில் அளிக்கும் நிலைக்கு இந்தியா உருவாகி வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.
English Summary
Prime Minister Modi announces that IIM Bangalore campus will be set up in Indonesia