''ஊழல் பற்றி பாஜக பேசுவது 'சாத்தான் வேதம் ஓதுவது போல்' உள்ளது''; மாணிக்கம் தாகூர் தாக்கு..! - Seithipunal
Seithipunal


''அயோத்தி ராமர் கோயில் காணிக்கைகளில் சங்பரிவார் அமைப்புகள் திருடியது குறித்து நாடு முழுவதும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஊழல் பற்றி பாஜக பேசுவது 'சாத்தான் வேதம் ஓதுவது போல்' உள்ளது'' என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

''மேகேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டலடித்திருப்பது வேடிக்கையானது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, ‘மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம்’ என எடியூரப்பா, பசவராஜ் பொம்மை முழங்கியதை அவர் மறந்துவிட்டார்.

தமிழகத்தின் ஒப்புதல் இன்றி காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்தது.

இரு மாநிலப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பிரதமர் மோடி, தன் கடமையைச் செய்யாமல் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார். ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் மத்தியில் ஆட்சியில் இல்லை. அதிகாரம் கொண்ட மத்திய அரசுதான் இதற்கு தீர்வு காண வேண்டும்.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு என தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் ஆதாரமற்ற குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். அயோத்தி ராமர் கோயில் காணிக்கைகளில் சங்பரிவார் அமைப்புகள் திருடியது குறித்து நாடு முழுவதும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஊழல் பற்றி பாஜக பேசுவது 'சாத்தான் வேதம் ஓதுவது போல்' உள்ளது''என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP talking about corruption is like Satan reciting the Vedas says Manickam Thakur


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->