மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி கைகோர்ப்பு; புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் அறிவிப்பு..!
First look and title announcement of the new film starring Vetrimaaran and Dhanush again
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் மீண்டும் உருவாக உள்ள புதிய படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணிகளில் ஒன்றாக இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் தனுஷின் படங்கள் பார்க்கப்படுகின்றன. இவர்கள் இருவரது கூட்டணியில் வெளிவந்த 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை', 'அசுரன்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றன.
இதனையடுத்து தனுஷை வைத்து வெற்றிமாறன் அடுத்து படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், 'அரசன்' படத்தில் தனுஷ் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடைபெறவில்லை; தற்போது சிம்புவுடன் 'அரசன்' படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதாவது வடசென்னை படத்தின் சொல்லப்படாத கதையாக 'அரசன்' திரைப்படம் உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் முதல் முறையாக வெற்றிமாறன் மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மீண்டும் சந்தோசத்தை கொடுக்கும் விதமாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளி வந்துள்ளது.
இந்த படத்துக்கு 'தமிழ் முருகன்' என்று பெயர் வைத்துள்ளார்கள். முதன்முறையாக பீரியட் படத்தை வெற்றிமாறன் தமிழ் முருகன் மூலமாக இயக்வுள்ளார். அத்துடன்,முதன் முறையாக இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் வெற்றிமாறன் 'தமிழ் முருகன்' படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படம் குறித்து 2 நாட்களாகவே தனுஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்த நிலையில் இன்று படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
First look and title announcement of the new film starring Vetrimaaran and Dhanush again