இங்கிலாந்து தொடரில் தொடர் தோல்விகள்; இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை..? - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தற்போது நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில், சிரேயஸ் ஐயரின் தலைமையிலான இந்திய அணி, படு மோசமாக தோல்வியடைந்து வருகிறது. 05 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழை காரணமாக முடிவு இல்லை. இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் இங்கிலாந்து மிக இலகுவாக வெற்றியீட்டியுள்ளது.

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஜோடியான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் சீரற்ற ஆட்டத்திறன் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, இங்கிலாந்து தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், உலகத்தரம் வாய்ந்த அதிரடி ஜோடியாகத் பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி – அபிஷேக் சர்மாவின் சமீபத்திய செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்துக்கு எதிரான கடந்த 03 இன்னிங்ஸ்களில் முறையே 13, 14 மற்றும் 04-வது டி20 போட்டியில் 15 ரன்கள் என மொத்தம் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 776 ரன்களுடன் 'ஆரஞ்சு தொப்பியை' வென்ற மிக இள வயது வீரர் என்ற சாதனை படைத்தத்தர். ஆனால், சர்வதேச போட்டிகளில் இன்னும் பெரிய ஸ்கோர் அடிக்க தடுமாறி வருவைத்தால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அடுத்ததாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் 59 மற்றும் 43 ரன்கள் எடுத்து ஓரளவுக்குச் சிறப்பாகத் தொடங்கினாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் 10 மற்றும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

இதன் காரணமாக, அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய இருவரின் சிக்ஸர் அடிக்கும் திறன் அசாத்தியமானது என்றாலும், அவர்கள் தங்களின் அதிரடியைக் கட்டுப்படுத்தி, பொறுப்புடன் விளையாட பழக வேண்டும் என்றும் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்றும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BCCI issues stern warning to young players Vaibhav Suryavanshi and Abhishek Sharma after series of defeats in England series


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->