“எனக்கும் நடிக்க சொல்லித் தருவியா?”.. குழந்தை நட்சத்திரத்திடம் தனுஷ் கேட்ட க்யூட் கேள்வி! - Seithipunal
Seithipunal


ஒரு படம் நன்றாக இருந்தால், அது எந்த மொழிப் படமாக இருந்தாலும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பாராட்டுவது வழக்கம். குறிப்பாக முன்னணி நடிகர்கள் மற்றொரு படத்தை வெளிப்படையாக பாராட்டுவது அரிதான நிலையில், நடிகர் தனுஷ் செய்துள்ள ஒரு செயல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் ‘இருமுடி’. ஷிவ நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி இரண்டாவது வாரத்திலும் வசூல் வேட்டை நடத்தி வருவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘இருமுடி’ படத்தை பார்த்த நடிகர் தனுஷ், படக்குழுவினரை பாராட்டியதுடன், அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி நக்ஷத்ராவையும் தனியாக வீடியோ கால் செய்து பாராட்டியுள்ளார்.

அப்போது பேபி நக்ஷத்ராவிடம் பேசிய தனுஷ், “சூப்பரா நடிச்சிருக்க பாப்பா. எனக்கும் உன்ன மாதிரி நடிக்க சொல்லித் தருவியா?” என்று க்யூட்டாக கேட்டுள்ளார்.

இதற்கு அந்த சிறுமியும் எந்த தயக்கமும் இல்லாமல், “ஓ... சொல்லித்தரேன்” என்று க்யூட்டாக பதிலளித்துள்ளார். தனுஷும் குழந்தை நட்சத்திரமும் பேசிக்கொண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிப்பில் அசுரனாக கொண்டாடப்படும் தனுஷே, ஒரு குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பை பாராட்டி, அவரிடமே நடிப்பு கற்றுக்கொள்வதாக விளையாட்டாக கூறியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நல்ல திரைப்படங்கள் எந்த மொழியில் வெளியானாலும், அதில் சிறப்பாக நடித்தவர்களை பாராட்டுவதற்கு மொழி தடையாக இருக்காது என்பதற்கு தனுஷின் இந்த செயலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. ‘இருமுடி’ படத்தின் வெற்றியுடன் தற்போது தனுஷ்–பேபி நக்ஷத்ரா வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will you teach me how to act too The cute question Dhanush asked the child star


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->