நடிப்பாக இருந்தாலும் யாருக்கோ முத்தம் கொடுக்க முடியாது.. சாய் பல்லவி செம போல்டு ஸ்டேட்மெண்ட்! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர், தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஓம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் தனது இயல்பான நடிப்பாலும், கவர்ச்சியை முன்னிறுத்தாத கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாலும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் சாய் பல்லவி, பாலிவுட்டிலும் அதே கொள்கையைப் பின்பற்றுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

பாலிவுட்டில் அவர் நடித்த முதல் வெளியீடாக ஏக் தின் திரைப்படம் வெளியானாலும், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும், ராமாயணம் திரைப்படம் அவரது இந்தி திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என திரையுலகில் பேசப்படுகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நெருக்கமான மற்றும் முத்தக் காட்சிகளில் நடிப்பது குறித்து சாய் பல்லவி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:"எனக்கு ஒரு காதலர் இருந்தால், அவர் நடிப்பிற்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ இன்னொருவரை முத்தமிடக்கூடாது என்பதே என் எண்ணம். ஒரு ஆணோ, பெண்ணோ நல்ல குடும்பம், வாழ ஒரு வீடு, ஒரு கார் இருந்தாலே மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்த முடியும். எனக்கு அவை ஏற்கனவே இருக்கின்றன."

மேலும் அவர் கூறுகையில், "இன்னொரு கார் வாங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது கூடுதல் சம்பளத்திற்காகவோ என் கொள்கையை மாற்றி முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் தற்போது வாழும் வாழ்க்கையிலேயே திருப்தியாக இருக்கிறேன். ஒரு திரைப்படத்தில் என்னை நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்பினால் மகிழ்ச்சியுடன் நடிப்பேன். ஆனால் நெருக்கமான அல்லது முத்தக் காட்சிகள் அவசியம் என்றால், அந்தக் கதாபாத்திரத்துக்கு வேறு நடிகையைத் தேர்வு செய்யலாம். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை," என்று தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவியின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சினிமாவில் வெற்றிக்காக தனிப்பட்ட கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்க, நடிகையின் தனிப்பட்ட தேர்வை மதிக்க வேண்டும் என்பதே மற்றொரு தரப்பினரின் கருத்தாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I canot kiss anyone even for a role Sai Pallavi bold statement


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->