அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பரிலா? புதிய தகவலை வெளியிட்ட வலைப்பேச்சு அந்தணன்!
Anirudh Kavya Maran wedding in November
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத்தைச் சேர்ந்த காவ்யா மாறன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக நீண்ட நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், இருவரின் திருமணம் தொடர்பாக புதிய தகவலை திரைப்பட விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு முதலே அனிருத் மற்றும் காவ்யா மாறன் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவின. வெளிநாட்டில் இருவரும் ஒன்றாக இருப்பதாகக் கூறப்படும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த பேச்சு மேலும் வலுப்பெற்றது.
அப்போது இந்த வதந்திகளுக்கு மறைமுகமாக பதிலளித்த அனிருத், தனது சமூக வலைதளப் பதிவில், "கல்யாணமா? எனக்கா?" என்று குறிப்பிட்டு பரவி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிவு செய்திருந்தார்.
இதற்கிடையில், மூத்த நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில், அனிருத் மற்றும் காவ்யா மாறன் காதலித்து வருவதாகவும், இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறியிருந்தார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், திரைப்பட விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் தனது யூடியூப் நிகழ்ச்சியில், அனிருத் – காவ்யா மாறன் திருமணம் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், குறிப்பாக நவம்பர் இரண்டாவது வாரம் திருமணத்திற்காக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திருமணத் தேதி தொடர்பான ஆலோசனையில் நடிகர் ரஜினிகாந்தின் பங்கும் முக்கியமானதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக, 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எந்தவித பணிச்சுமையும் இல்லாத நேரத்தில் திருமணத்தை நடத்தலாம் என்ற எண்ணத்தில் இரு குடும்பங்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பிலிருந்து இதுவரை திருமணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Anirudh Kavya Maran wedding in November