எங்களால் எதையும் சாதிக்க முடியும்...! ராட்சத அலைகளையும் தாண்டி 2 கிலோமீட்டர் நீந்திய ஆட்டிசம் குழந்தைகள்...!
We can achieve anything Autistic children swam 2 kilometers across giant waves
சென்னை மெரினா கடற்கரையில் மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு புதிய அடையாளமாக, ஆட்டிசம் கொண்ட 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோமீட்டர் தூரம் கடலில் நீந்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் திறமைகளை சமூகத்திற்கு வெளிப்படுத்துவதோடு, அவர்களின் தன்னம்பிக்கையையும் தன்னிறைவு உணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில், தனியார் அறக்கட்டளை சார்பில் மெரினா கடற்கரையில் சிறப்பு கடல் நீச்சல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற 39 குழந்தைகளும் ஒற்றுமையுடனும் உற்சாகத்துடனும் 2 கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நீந்தி முடித்து, மன உறுதியால் எதையும் சாதிக்க முடியும் என்பதை செயல்மூலம் நிரூபித்தனர்.
மெரினா கலங்கரை விளக்கத்தில் தொடங்கிய இந்த நீச்சல் பயணம், கண்ணகி சிலை வரை நடைபெற்றது. நிகழ்ச்சியின் வாயிலாக ஆட்டிசம் குறித்த சமூக விழிப்புணர்வை பரப்புவதுடன், கடல் வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ஆட்டிசம் என்பது திறமைகளுக்கு தடையல்ல; உரிய பயிற்சி, ஊக்கம் மற்றும் வாய்ப்பு கிடைத்தால் உயரிய சாதனைகளை நிகழ்த்த முடியும் என்ற வலுவான செய்தியை இந்த நிகழ்வு சமூகத்திற்கு எடுத்துரைத்தது.
English Summary
We can achieve anything Autistic children swam 2 kilometers across giant waves