சென்னை மெரினாவில் சோகம்...! நண்பர்களுடன் குளித்தபோது இழுத்துச் சென்ற ‘ராட்சத அலை’...! - பள்ளி மாணவன் பலி
Tragedy Chennai Marina giant wave dragged him away while he bathing friends schoolboy died
சென்னை எண்ணூர் கடற்கரையில் நண்பருடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்றொரு மாணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பெரிய காசி கோவில் குப்பம் முதல் தெருவைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கவுதம் (15), அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் பயின்று வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிஷ் (15), 10-ம் வகுப்பு மாணவர் ஆவார்.நேற்று மாலை நண்பர்களான இருவரும் எண்ணூர் பெரியக்குப்பம் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் இருவரும் சிக்கி, கடலின் ஆழப்பகுதியை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரு மாணவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், அவசர மருத்துவ ஊர்தி மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டபோது, கவுதம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.மற்றொரு மாணவரான ஜோதிஷுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Tragedy Chennai Marina giant wave dragged him away while he bathing friends schoolboy died