"இது எனக்கு பெருமையான தருணம்".. அறக்கட்டளை மாணவியின் தங்கப்பதக்க வெற்றியால் நெகிழ்ந்த நடிகர் விஷால் - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால் தனது தாயார் பெயரில் செயல்பட்டு வரும் 'தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை' மூலம், பொருளாதார வசதி இல்லாத மாணவர்களின் உயர்கல்விக்கு பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டின் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில், தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின் உதவியுடன் கல்வி பயின்ற 10 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இதில், அந்த அறக்கட்டளையின் மாணவியான தீபிகா, பேச்சிலர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (BCA) பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதுகுறித்து விஷால் தனது சமூக வலைதளப் பதிவில், "இந்த ஆண்டின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று. எங்கள் அறக்கட்டளையின் ஆதரவுடன் கல்வி பயின்ற 10 மாணவர்கள் பட்டம் பெற்றிருப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. அதிலும், தீபிகா தங்கப்பதக்கம் வென்றிருப்பது எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. இளம் தலைமுறையினர் தங்கள் கனவுகளை நனவாக்குவதை பார்ப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தீபிகாவின் இந்த சாதனை, பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும் விடாமுயற்சியுடன் கல்வியை தொடர முடியும் என்ற நம்பிக்கையை தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அளிக்கிறது. இது எங்கள் அறக்கட்டளையில் உள்ள அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2023–24 கல்வியாண்டில் தேவி அறக்கட்டளையில் இணைந்த தீபிகா, கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சத்தியபாமா கல்வி நிறுவன நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் திருமதி மரியாஜீனா ஆகியோருக்கும் விஷால் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

இறுதியாக, "எங்கள் மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து கனவு காணுங்கள், தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள். இது உங்கள் வெற்றிப் பயணத்தின் தொடக்கம் மட்டுமே. கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

விஷாலின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது சமூகப்பணிக்கும், கல்வி உதவித் திட்டத்திற்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is a proud moment for me Actor Vishal moved by the gold medal win of a student from his foundation


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->