கொளத்தூர் குறித்துப் பேசியது அரசியல் நாகரிகமா...? குதிரை பேரப் புகாருடன் முதலமைச்சர் விஜய்யின் விமர்சனங்களுக்கு ஆர்.எஸ்.பாரதி கொடுத்த நெத்தியடி பதில்...! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் விஜய் மீது முன்வைக்கப்பட்டுள்ள 'குதிரை பேரம்' குற்றச்சாட்டு தொடர்பாக புதிய தகவல்களை இணைத்து, ஆளுநருக்கும் மத்திய புலனாய்வு அமைப்புக்கும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீண்டும் புகார் மனு அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த 1-ஆம் தேதி ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சர் விஜய் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், கடந்த 2-ஆம் தேதி தங்களது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், "நாங்களாகச் செல்லவில்லை; தமிழக வெற்றிக் கழகமே எங்களை அணுகியது. அதன்பிறகே அந்தக் கட்சியில் இணைந்தோம்" என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தே, தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அணுகி இணைத்துக் கொண்டதாகக் கருதக்கூடிய முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தனது புதிய புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனை சுட்டிக்காட்டி, மின்னஞ்சல் வாயிலாக ஆளுநருக்கு கூடுதல் விளக்கத்துடன் புகார் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், முதலமைச்சர் விஜய் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த மனுவின் நகலை மத்திய புலனாய்வு அமைப்பிற்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியில் குதிரை பேரமே காரணம். அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன" என்று குற்றம்சாட்டினார்.மேலும், "கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் பேசிய விவகாரத்திலும் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.

குதிரை பேரம் தொடர்பாக கடந்த 4-ஆம் தேதி ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தோம். தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்துள்ள பேட்டியே இந்த விவகாரத்தில் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது" என்றும் அவர் கூறினார்.

அத்துடன், "கொளத்தூர் குறித்து முதலமைச்சர் பயன்படுத்திய வார்த்தைகள் அரசியல் நாகரிகத்திற்கு பொருந்தாதவை. பொதுவெளியில் இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Was it political correctness talk about Kolathur RS Bharathi blunt response Chief Minister Vijay criticism horse trading allegations


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->