தர்பூசணி காமெடிக்கு போட்டுட்டாங்க end கார்டு...! யூடியூபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் காவலர்களிடம் சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


யூடியூப் சேனலுடன் தொடர்புடைய நபரிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதுடன், உயிர் அச்சுறுத்தலும் விடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சமூக வலைத்தளங்களில் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என்ற பெயரில் பிரபலமான திவாகரை காவலர்கள் மதுரையில் கைது செய்துள்ளனர்.மதுரையைச் சேர்ந்த திவாகர், உடலியக்க சிகிச்சை படிப்பை முடித்தவர். சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை காணொளிகள் மூலம் பிரபலமான இவர், ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என்ற பெயரில் பரவலாக அறியப்படுகிறார்.

குறிப்பாக, ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற தர்பூசணி காட்சியை நகைச்சுவை பாணியில் மீண்டும் உருவாக்கி வெளியிட்ட காணொளி மூலம் இணையத்தில் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.அதன்பின்னர், தமிழ் *பிக்பாஸ்* ஒன்பதாவது பருவத்தில் போட்டியாளராக பங்கேற்று மேலும் கவனம் பெற்றார். தொடர்ந்து யூடியூப் நேர்காணல்கள், சமூக வலைத்தள காணொளிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில திரைப்படங்களிலும் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட காணொளியில், பல்வேறு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திவாகர் கருத்து தெரிவித்திருந்தார்.இந்தக் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலுடன் தொடர்புடைய நபர், அந்தக் காணொளியை நீக்குமாறு திவாகரிடம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, காணொளியை நீக்குவதற்காக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும், மறுத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது.இதையடுத்து, அந்த நபர் சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கொலை மிரட்டல் மற்றும் பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், திவாகரை பிடிக்க சிறப்பு குழுவை அமைத்தனர்.

சிறப்பு குழுவினர் மதுரையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது திவாகர் கைது செய்யப்பட்டார். யூடியூப் சேனலுடன் தொடர்புடைய நபரிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் பல்வேறு அம்சங்கள் குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

watermelon comedy given end card How did Watermelon Star who tried blackmail YouTuber and extort money get caught by Divakar police


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->