விஜய்யின் த.வெ.க-வை அண்ணாமலை அசைக்க முடியுமா...? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்...! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் புஞ்சைப்புளியம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல், கூட்டணி அரசியல், இளைஞர்களின் ஆதரவு மற்றும் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்து, அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்களை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது," "வீ த லீடர்ஸ்" அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்களுக்கும், எங்களுடன் இணைந்து செயல்படும் இளைஞர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எங்களுடன் இருக்கும் இளைஞர்கள்தான் உண்மையான மக்கள் சக்தியாக திகழ்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள். மக்களின் நம்பிக்கையால் உருவான ஆட்சிதான் தற்போது நடைபெற்று வருகிறது.ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது.

அதேபோல் கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதை விமர்சிப்பவர்கள், ஸ்டெர்லைட் சம்பவத்தில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பை அப்போது ஏன் கேள்வி எழுப்பவில்லை என்பதற்கு பதில் அளிக்க வேண்டும்.

தி.மு.க. 96 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. ஆனால், நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளித்து அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளோம். இது தமிழக வெற்றிக் கழக அரசின் அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்தால் என்ன தவறு என்று டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அரசியல் ரீதியாக நேரெதிர் கொள்கைகளைக் கொண்ட இரண்டு கட்சிகள் வட துருவமும் தென் துருவமும் போன்றவை என்பது அவருக்கே நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

அ.தி.மு.க.வின் கொள்கைகளையும், அதன் அரசியல் அடையாளத்தையும் மாற்றிப் பேசுபவர்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. அந்தக் கட்சியின் அடிப்படை கொள்கைகளை யாரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி விளக்க முடியாது.

தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்தாதது குறித்து ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழகத்தின் நிலைப்பாட்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளார். அந்த விளக்கமே அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Can Annamalai shake Vijay Tvk Minister Sengottaiyan dramatic explanation


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->