அன்புமணியின் அரசியல் பாணியை பின்பற்றும் அண்ணாமலை, சீமான்? அரசியல் பார்வையாளர்கள் சொல்வது என்ன?
Are Annamalai and Seeman emulating Anbumani political style What do political observers say
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகிய பிறகு "வீ தி லீடர்ஸ்" என்ற புதிய அமைப்பைத் தொடங்கி அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகிறார். அந்த அமைப்பின் முதல் மாநில மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்திய அவர், இரண்டாவது மாநாட்டை திருச்செந்தூரில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பிரச்சினைகள் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அண்ணாமலையின் புதிய அரசியல் அணுகுமுறையை ஒப்பிட்டு அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதம் எழுந்துள்ளது.அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, *பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூரண மதுவிலக்கு, போதை ஒழிப்பு, மரம் வளர்ப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து அரசியல் மற்றும் பொது வாழ்க்கையின் முக்கிய கருப்பொருள்களாக முன்வைத்து வருகிறார்.
தற்போது அண்ணாமலையின் "வீ தி லீடர்ஸ்" அமைப்பும் இதே போன்ற சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், விவசாயம், மரம் வளர்ப்பு உள்ளிட்ட அம்சங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதனால், அன்புமணி நீண்ட காலமாக முன்னிறுத்தி வந்த அரசியல் கருப்பொருள்களையே தற்போது அண்ணாமலையும் சீமானும் தங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய அம்சங்களாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என்ற கருத்தை சில அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, மதுவிலக்கு போன்றவை எந்த ஒரு தனிக் கட்சிக்கும் சொந்தமான கொள்கைகள் அல்ல என்றும், பொதுநலன் சார்ந்த விஷயங்கள் என்பதால் பல்வேறு அரசியல் கட்சிகள் அவற்றை தங்கள் கொள்கைகளில் முன்னிலைப்படுத்துவது இயல்பான ஒன்றே என்றும் மற்றொரு தரப்பு கருத்து தெரிவிக்கிறது.அண்ணாமலை மற்றும் சீமான் ஆகியோர் அன்புமணியின் அரசியல் கருப்பொருள்களைப் பின்பற்றுகிறார்ககள்.
2016ஆம் ஆண்டு மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற பிரசாரம் பொதுமக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.ஆனால்,தேர்தல் வெற்றி கிடைக்கவில்லை. சமூகப் பிரச்சினைகளை அரசியலில் தொடர்ந்து பேசிய வந்தார் அன்புமணி. அதன் பலனாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்,மது கடைகள் நேர குறைப்பு போன்ற பல சிறப்பு திட்டங்களுக்கு அன்புமணி காரணமாக இருந்தார்.இதனை கருத்தில்கொண்டுதான், மாற்றம் என்ற இடத்தில் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அன்புமணி பாணியை அண்ணாமலையும் சீமானும் பின்பற்றுகிறார்கள் என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்!
English Summary
Are Annamalai and Seeman emulating Anbumani political style What do political observers say