பட்டம் வாங்கிய விஜய் மகள் திவ்யா சாஷா..அதுக்குக்கூட போகாத விஜய்! அப்பாவாக மாறிய அண்ணன் ஜேசன் சஞ்சய்! - Seithipunal
Seithipunal


நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சனை கடந்த சில நாட்களாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் விவாகரத்து மனு தற்போது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கீதா, அவருடன் நீண்ட காலமாக குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பல திரைப்படங்களில் விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைனராகவும் சங்கீதா பணியாற்றியுள்ளார். குடும்பத்திலும் தொழிலிலும் விஜய்யுடன் இணைந்து செயல்பட்ட அவர் தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கீதா தனது மனுவில் கூறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளே இந்த விவகாரத்தில் அதிக சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த குற்றச்சாட்டுகளை நம்பலாமா இல்லையா என்பது குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த செய்தி வெளியான முதல் நாளில், விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் சங்கீதாவிடம் உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் சிலர் சங்கீதாவை கடுமையாக விமர்சிக்க தொடங்கியதும் சமூக ஊடகங்களில் கண்டனத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் விஜய் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காதது பற்றியும் கேள்விகள் எழுகின்றன. குறைந்தபட்சம் தனது மனைவியை சமூக ஊடகங்களில் விமர்சிக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கும் கட்சியினருக்கும் அறிவுறுத்தியிருக்கலாம் என்ற கருத்தும் பலரிடையே எழுந்துள்ளது.

மேலும் இந்த பிரச்சனையில் விஜய்யின் குழந்தைகள் எந்த மனநிலையில் உள்ளனர் என்பது பற்றியும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. சில தகவல்களின் படி, அவர்கள் தாய்க்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தையை சமூக ஊடகங்களில் பின்தொடர்வதை நிறுத்தியதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் சமூக ஊடகங்களில் ஒரு பழைய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு விஜய்யின் மகள் திவ்யா சாஷா பள்ளியில் பட்டம் பெற்றபோது, அந்த நிகழ்ச்சியில் அவரது அண்ணன் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டு தங்கைக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளாதது குறித்து சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மனைவியுடன் பிரச்சனை இருந்தாலும் குழந்தைகளின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது ஒரு தந்தையின் பொறுப்பு என சமூக ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே இந்த விவகாரம் எந்த திசையில் நகரும் என்பது குறித்து தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay daughter Divya Sasha gets her degree Brother Jason Sanjay becomes a father


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->