ஸ்ருதி குரல்...சாய் இசை…! ‘பவழ மல்லி’ ப்ரோமோ வைரல் ஹிட்...!
Shruti voice Sai music Pavazha Malli promo viral hit
தமிழ் திரையுலகில் புதுமையான இசை மொழியால் வேகமாக உயர்ந்து வரும் இசையமைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அண்மைக்காலத்தில் பல பெரிய படங்களுக்கும் இசையமைத்து தனது தடத்தை பதித்துள்ளார்.

குறிப்பாக சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இணையும் கருப்பு திரைப்படத்திற்கும் அவர் இசை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், தொடர்ந்து பல பெரிய பட்ஜெட் படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது இன்டீ இசைப் பயணத்தையும் விடாமல் முன்னெடுத்து வரும் சாய் அபயங்கர், அடுத்த தனிப்பாடலுக்கான ப்ரோமோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
'பவழ மல்லி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியிருக்க, ஸ்ருதி ஹாசன் தனது குரலை வழங்கியுள்ளார்.
மேலும், சாய் அபயங்கரின் இசையில் உருவான இந்தப் பாடல் வரும் மார்ச் 5ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது.ஏற்கனவே வெளியான ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருமணத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
English Summary
Shruti voice Sai music Pavazha Malli promo viral hit