மெஸ்ஸியின் கோல் சாதனை முறியடிப்பது அல்ல; உலகக் கோப்பை பட்டம் வெல்வதான் இலக்கு; பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே..! - Seithipunal
Seithipunal


கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 03 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்,மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், இதில் லீக் சுற்றுகள் முடிவில் 16 அணிகள் வெளியேற்றப்பட்டு, தற்போது 32 அணிகள் பங்கேற்றுள்ள நாக் அவுட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஃபிபா உலகக் கோப்பை தொடருடன் வரலாற்றில் அதிக கோல் பதிவு செய்தவர் என்ற சாதனையை அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி படைத்துள்ளார். இந்த பட்டியலில் அவரை தொடர்ந்து எம்பாப்பே 02-ஆம் இடத்தில உள்ளார். இந்த பட்டியலில் மெஸ்ஸி 19 கோல்கள் உடன் முதலிடத்தில் உள்ளார். 27 வயதான எம்பாப்பே 18 கோல்கள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டத்தில் ஸ்வீடன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. இதன் மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு பிரான்ஸ் அணி முன்னேறியுள்ளது. இந்த ஆட்டத்தில் 02 கோல்களை தனது அபார ஆட்டத்தின் மூலம் பதிவுசெய்தார் எம்பாப்பே.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; ''நான் ஏற்கெனவே சொன்னது போல எங்கள் இலக்கு இறுதிப் போட்டியில் விளையாடுவதுதான். நாங்கள் வெற்றி பெற முயற்சிக்கிறோம். ஒவ்வொரு ஆட்டமாக அணுகி வருகிறோம். அதிக கோல் பதிவு செய்யும் வீரர் நிச்சயமாக தரவரிசையின் உச்சத்தில் இருப்பார். நான் சொல்வது ஒன்றும் புதிது அல்ல.

ஆனால், லியோ (மெஸ்ஸி) அதிக கோல்கள் பதிவு செய்வார் என நம்புகிறேன். அதனால், அதில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எனது கவனம் நாங்கள் விளையாடும் எதிரணியின் மீது உள்ளது. மற்றும் எந்த அளவுக்கு எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் நெருங்குகிறோம் என்பதில் உள்ளது''என்று எம்பாப்பே கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

France player Kylian Mbappe says his goal is not to break Messi goal record but to win the World Cup


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->