முதல்வர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி வைத்த 6 கோரிக்கைகள்! தமிழ் சினிமா வளர்ச்சிக்கான பரிந்துரைகள்! - Seithipunal
Seithipunal


தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் நலிந்த கலைஞர்களின் நலன் தொடர்பாக ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கும், திரைப்படத் துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், லஞ்சமும் ஊழலும் இல்லாத நிர்வாகம் அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சீனு ராமசாமி முன்வைத்துள்ள முக்கிய பரிந்துரைகள்:அரசு தியேட்டர்கள்: கேரளாவில் உள்ளதைப் போல தமிழ்நாட்டிலும் அரசு சார்பில் திரையரங்குகள் அமைக்க வேண்டும். இதன்மூலம் நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு திரையிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரைப்பட ரசனை பாடம்: மாணவர்கள் சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல் ஒரு கலை வடிவமாகப் புரிந்துகொள்ளும் வகையில் திரைப்பட ரசனை தொடர்பான பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

உலகத் திரைப்பட மாநாடு: உலகத் தமிழ் மாநாட்டைப் போல, தமிழக அரசு சார்பில் உலகத் திரைப்பட மாநாட்டை நடத்தி, தமிழ் திரைப்படத் துறையையும் சர்வதேச கலைஞர்களையும் இணைக்கும் தளமாக உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

படப்பிடிப்புக்கான சிங்கிள் விண்டோ முறை: வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் கலாச்சார தளங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஒருங்கிணைக்கும் ஆன்லைன் 'சிங்கிள் விண்டோ' முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், இதனால் தாமதங்கள் மற்றும் முறைகேடுகளை குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுயாதீன திரைப்படங்களுக்கு அரசு நிதியுதவி: பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது நட்சத்திர ஆதரவு இல்லாத திறமையான இயக்குநர்களின் சுயாதீன திரைப்படங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நலிந்த கலைஞர்களுக்கான வீட்டு வசதி: இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த திரைப்படக் கலைஞர்களுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வீட்டு வசதித் திட்டங்களை விரைவுபடுத்தி, தகுதியானவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, திரைப்படத் துறையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான இந்தக் கொள்கை மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பரிசீலித்து செயல்படுத்தும் என்ற நம்பிக்கையை சீனு ராமசாமி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 requests made by Director Seenu Ramasamy to Chief Minister Vijay Recommendations for the growth of Tamil cinema


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->