FIFA கால்பந்து தொடரில் 16-வது சுற்றுக்கு முன்னேறிய மெக்ஸிகோ; வெற்றிக் கொண்டாட்டத்தில் 03 பேர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் இந்த தொடரில்,மொத்தம் 48 அணிகள் பங்கேற்றனர். இதில் லீக் சுற்றுகள் முடிவில் 16 அணிகள் வெளியேற்றப்பட்டு, தற்போது 32 அணிகள் பங்கேற்றுள்ள நாக் அவுட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோ இதுவரை ஒரு கோல்களை கூட விட்டுக்கொடுக்காமல் வலுவான அணியாக உள்ளது. அத்துடன், ரவுண்ட் 32 வரை முன்னேறிய அந்த அணி ஈகுவடார் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 2-0 என வென்று ரவுண்ட் 16-க்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

இந்த வரலாற்று வெற்றிக்கொண்டாட்டம் மெக்சிகோவில் கலைகட்டியது. இதற்காக மெக்சிகோ சிட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 வயது இளம்பெண் உள்பட மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்த்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மேயர் கிளாரா ப்ருகாடா இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three people tragically died during Mexicos victory celebration as they advanced to the round of 16 in the FIFA football series


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->