திருவாரூரில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்! அரசின் சார்பில் மரியாதை!
organ donation thiruvarur
திருவாரூரைச் சேர்ந்த ஜெகதீஷ் பாபு (36) என்பவர் சமீபத்தில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.
இந்தத் துயரச் சூழலில், ஜெகதீஷ் பாபுவின் குடும்பத்தினர் முன்வந்து, அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய ஒப்புதல் அளித்து, மனிதநேயத்தின் உயரிய செயலை வெளிப்படுத்தினர்.
உறுப்பு தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெகதீஷ் பாபுவின் உடலுக்கு, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
விபத்தில் ஒரு உயிரை இழந்தாலும், அவரது உறுப்புகள் மூலம் பல உயிர்களைக் காக்க வழிவகை செய்த ஜெகதீஷ் பாபுவின் குடும்பத்தின் இந்தச் செயல், அப்பகுதியில் பெரும் பாராட்டுக்குரியதாக மாறியுள்ளது.
English Summary
organ donation thiruvarur