விஜயை தாக்கி பேசினாரா ரஜினி...? உள்நோக்கமா? அல்லது அரசியல் கருத்தா?
Did Rajinikanth attack Vija Was it ulterior motive Or a political point
நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்,இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு வெற்றி பயணத்தை கௌரவிக்கும் விழா அரசின் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் “சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் – இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50” என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அமைச்சர்கள், திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்ததாவது,"இந்திய அரசியலில் நட்சத்திரமாக, ஆளும் கட்சியினருக்கும் புதிய-பழைய எதிர்க்கட்சியினருக்கும் சவாலாக திகழும் என் நண்பர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனக்கே உரிய புன்னகையுடன் குறிப்பிட்டார்.
இந்நேரத்தில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) என்ற புதிய கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் புயலை கிளப்பி வரும் நடிகர் விஜய், தொடர்ந்து தி.மு.க. மீது கூர்மையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இதனால், “புதிய எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக இருப்பவர் ஸ்டாலின்” என ரஜினிகாந்த் கூறியதன் பின்னணியில், அவர் மறைமுகமாக விஜயை குறித்தாரா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், ரசிகர்களும் அரசியல் வட்டாரங்களும் இதை தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
English Summary
Did Rajinikanth attack Vija Was it ulterior motive Or a political point