ஒவ்வொரு மலைக்கும் தனித்தனி வரலாறும், ஆன்மீக முக்கியத்துவமும்..திருப்பதியில் உள்ள 7 மலைகள் யுனெஸ்கோ பட்டியலில் இடம்!
7 mountains in Tirupati included in UNESCO list
திருப்பதி மலைகள் மற்றும் பீமிலி சிவப்பு மணல் திட்டுகள் உட்பட, நாட்டின் 7 இடங்கள் உலக பாரம்பரிய அங்கீகாரத்திற்காக யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏழுமலையான் தங்கியிருக்கும் திருப்பதியின் ஏழு மலைகள் — சேஷாத்ரி, நிலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி மற்றும் வெங்கடாத்ரி — அனைத்தும் விஷ்ணுபகவான் ஓய்வெடுத்த ஆதிசேஷனின் ஏழு பாதங்களாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு மலைக்கும் தனித்தனி வரலாறும், ஆன்மீக முக்கியத்துவமும் உள்ளது.
பல்லுயிர் பெருக்கத்திற்கான புகலிடமாக விளங்கும் இந்த மலைகள், அரிய தாவர மற்றும் விலங்கு இனங்களின் தாயகமாகவும் உள்ளன. இயற்கை அழகும், ஆன்மீகத்தும் ஒன்றிணையும் திருப்பதி மலைகள், உலக அங்கீகாரம் பெற்றிருப்பது பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் பின்னணியில், நேற்று திருப்பதி கோவிலில் பக்தர்கள் அலைமோதினர். காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்ததால், பலர் திறந்த வெளியில் உணவு உண்டு உறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் குளிர்ச்சியான காலநிலை நிலவினாலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நீண்ட நேரம் காத்திருப்பதால் அவதியடைந்தனர்.
நேற்றைய தினம் மட்டும் 82,149 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 3,46,578 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
உலக பாரம்பரிய அங்கீகாரம் கிடைத்திருக்கும் நிலையில், திருப்பதி மலைகள் மீதான ஆன்மீக ஈர்ப்பு மேலும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
7 mountains in Tirupati included in UNESCO list