தி.மு.க. அரசை விமர்சிப்பதற்கு முன்பு விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
DMK Vijay should study before criticizing the government Minister M Subramanian
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தனது முதல் அரசியல் பயணமான “மக்கள் சந்திப்பு” நிகழ்வை திருச்சியில் தொடங்கினார். இந்நிகழ்வில் அவர் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து வரும் தி.மு.க. அமைச்சர்களில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:“தி.மு.க. அரசை விமர்சிப்பதற்கு முன்பு விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற மக்கள் நலத் திட்டங்கள் விஜய் போன்றவர்கள் சொல்லிக் கொண்டுவந்தவை அல்ல.
இந்த அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் நன்கு தெரியும்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 6.5 சதவீதம். ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம்.
இதையெல்லாம் விஜய் படித்து அறிந்து கொண்ட பின் தான் குற்றம்சாட்டுவது நல்லது,” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Vijay should study before criticizing the government Minister M Subramanian