போக்குவரத்து மாற்றம் ..கடலூர் செல்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.!
Traffic change A important announcement for those going to Cuddalore
வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மேற்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை கடைப்பிடித்து மேற்படி ரயில்வே மேம்பாலப் பணிகள் முடியும் வரை ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
புதுச்சேரி, புதிய நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள கடலூர் சாலையில் அமைக்கப்பட உள்ள ரயில்வே மேம்பாலம் (ROB) கட்டுமானத்தின் கட்டிட பணிகள் கடந்த 31.07.2025 அன்று முதல் நடந்து வருகின்றது. இதன் அடுத்த கட்ட பகுதியாக வரும் 15.09.2025 (திங்கட்கிழமை) அன்று முதல் AFT ரயில்வே கிராசிங்யை முழுமையாக மூடப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் சாலை பயணிகளின் நலன் கருதி, கீழ்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் வரும் 15.09.2025 (திங்கட்கிழமை) காலை முதல் அமல்படுத்தப்படுகின்றன:
🔹 CV சாலை சந்திப்பில் இருந்து கடலூர் சாலையில் முதலியார்பேட்டை AFT ரயில்வே கிராசிங்யை கடந்து செல்வதற்கு பேருந்துகள், நடுத்தர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், போன்ற அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
🔹 புதுச்சேரி பஸ் நிலையத்திலிருந்து கடலூர் மார்க்கமாக செல்லும் அனைத்து கனரக வாகனங்கள்(பேருந்துகள் உட்பட) மற்றும் நடுத்தர வாகனங்கள், CV சாலை சந்திப்பில் U-TURN செய்து மறைமலை அடிகள் சாலையில் நெல்லித்தோப்பு சந்திப்பு - POINT CARE சந்திப்பு வழியாக இந்திரா காந்தி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை வழியாக மரப்பாலம் சந்திப்பை நோக்கிச் செல்ல வேண்டும்.
🔹 கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கடலூர் சாலையில் வரும் அனைத்து கனரக வாகனங்கள்(பேருந்துகள் உட்பட) மற்றும் நடுத்தர வாகனங்கள், மரப்பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் நோக்கிச் செல்ல வேண்டும்.
🔹 பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்களும் மரப்பாலம் சந்திப்பைக் கடந்து முதலியார்பேட்டை நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. (அவசரகால வாகனங்கள்: ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் போன்றவை தவிர, முதலியார்பேட் விநாயக முருகன் டீக்கடை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை வழியாக சோனாம்பாளையம் சந்திப்பு நோக்கி செல்ல வேண்டும்).
🔹 மரப்பாலத்திலிருந்து வெங்கட சுப்பரெட்டியார் சிலை நோக்கி வரும் இலகு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வழக்கமான பாதையை பின்பற்றி AFT ரோட்டில் இடதுபுறம் திரும்பி, புவன்கரே வீதி வழியாக பயணிக்க வேண்டும்.
🔹 CV சாலை சந்திப்பில் இருந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் வனத்துறைக்கு செல்லும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வழக்கம் போல் செல்லலாம். அவர்கள் வெளியே வரும்போது, பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி புதிய சிமென்ட் சாலையில் சென்று வெங்கட சுப்பரெட்டியார் சிலை சந்திப்பை அடையவேண்டும்.
எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மேற்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை கடைப்பிடித்து மேற்படி ரயில்வே மேம்பாலப் பணிகள் முடியும் வரை ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
English Summary
Traffic change A important announcement for those going to Cuddalore