கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையுள்ளதா? திமுக அமைச்சருக்கு பாஜக பதிலடி!
BJP Narayanan condemn to DMK Minister
பாஜக அண்ணாமலை மீது திமுக அமைச்சர் முன்வைத்த விமர்சனத்திற்கு, பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், "திமுக வை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
தனிமனித விமர்சனத்தை தவிர்ப்பது உயர்கல்வி துறை அமைச்சருக்கு நல்லது. கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையுள்ளதா?
உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால் அத்தனை வண்டவாளங்களும் வெளிச்சத்திற்கு வந்து விடும் என்று உங்களுக்கு தெரியாதது வியப்பளிக்கிறது.
அண்ணாமலை அவர்களால் திமுகவினர் தூக்கமின்றி தவித்ததும், தவித்துக் கொண்டிருப்பதும் உலகறிந்த உண்மை. பாஜக வில் குடும்ப அரசியலோ, வாரிசு அரசியலோ இல்லை என்பது கூட தெரியாத ஒரு அமைச்சர் இப்படி விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திமுகவில் சொல்லப்படும் பதவி, பாஜகவில் பொறுப்பு, அது மாறிக் கொண்டேயிருக்கும் என்பதை அறியுங்கள். அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும். அப்போது நீங்கள் காலாவதியாகியிருப்பீர்கள் என்பதை உணருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan condemn to DMK Minister