'முதல்வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'; ஆளுநருக்கு கடுத்த எழுதியுள்ள திமுகவின் அமைப்புச் செயலாளர்..!
DMK writes to Governor demanding action against Chief Minister Vijay
''குதிரை பேரத்தில் முதல்வரே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தி, ஆளுநர் அர்லேகருக்கு திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ''கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.எம்.ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து முதல்வர் ஜோசப் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோவே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் முதல்வரே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் விஜய் அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரையும் குதிரை பேரம் மூலமாக பதவி விலக செய்து, தவெகவில் இணைத்துள்ளார்'' என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
DMK writes to Governor demanding action against Chief Minister Vijay