மருத்துவமனை மீது வான்தாக்குதல்..12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியான சோகம்!
A sky attack on the hospital A tragedy where 32 people, including 12 children lost their lives
காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியாகினர்.
கடந்த 2023-ம் ஆண்டு தலைநகர் ஜெருசலேமில் நுழைந்து காசா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத்தாக்குதலில் 1,200 பேர் பலியாகினர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக காசா அமைப்பினர் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது வருகிறது . 2 ஆண்டுகளாக தொடரும் இந்த போரில் இதுவரை சுமார் 64 ஆயிரத்து 700 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு எச்சரிக்கை விடுத்து போரை நடத்திவருகிறார்.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் கடைசி கோட்டையாக உள்ள காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் அங்குள்ள ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து நோயாளிகள் அனைவரும் அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
English Summary
A sky attack on the hospital A tragedy where 32 people, including 12 children lost their lives