அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை; தேவைப்படும் வரை மத்திய கிழக்கில் போரைத் தொடருவோம்; ஈரான் திட்டவட்டம்..!
Iran says there is no room for negotiations with the US
அணி ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டாக இணைந்து ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.
இந்த சொல்லலில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம், போர் தொடரும் என்றும் ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் மூத்த உதவியாளர் முகமது மொக்பர் இது குறித்து கூறியுள்ளதாவது:
''ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. தேவைப்படும் வரை மத்திய கிழக்கில் போரைத் தொடருவோம் என அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவம் (IRGC) அமெரிக்காவுக்கு எதிராக 17-வது அலை தாக்குதல்களைத் தொடங்கியதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4 தாக்குதல்களை அறிவித்த ஈரான் இஸ்லாமிய புரட்சிகர ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை, இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு, தங்கள் ராணுவம் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது 230-க்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ஏவியதாகக் கூறியுள்ளது.

ஈரானின் பதில் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள ஒரு பெரிய அமெரிக்க விமானத் தளம் முடக்கியுள்ளது. ஈரான் ராணுவத்தின் தகவல்களின்படி, போரின் முதல் இரண்டு நாட்களில் பல்வேறு அமெரிக்க தளங்களில் உள்ள அமெரிக்க படைகளில் 680-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51-வது பிரிவின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
English Summary
Iran says there is no room for negotiations with the US