வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்! 2 திய பாடப்பிரிவுகள் அறிமுகம்!
TN Govt Agree University Application open
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வை சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
அதன்பின் அவர் கூறியதாவது: மாணவர்கள் [http://tnau.ucanapply.com] (http://tnau.ucanapply.com) என்ற இணையதளத்தில் இன்று (மே 9) முதல் ஜூன் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ₹600 கட்டணமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் ₹300 கட்டணமும் செலுத்த வேண்டும்.
இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6971 இடங்கள் உள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5%, தொழில்முறை கல்வியாளர்களுக்கு 5%, மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும், விளையாட்டு துறையில் சிறந்தவை பெற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளது.
இந்த ஆண்டு வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிர் தகவலியல் என்ற இரண்டு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகமாகின்றன. ஒவ்வொன்றிலும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இளம் அறிவியல் பாடங்களுக்கான கலந்தாய்வு ஜூன் 16ல் தொடங்கும் எனவும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
English Summary
TN Govt Agree University Application open