நாட்டில் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!
Prime Minister Modi consults with the three service commanders
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதன் போது பொது மக்களை பாதிக்காமல், பாகிஸ்தான் ராணுவத்தை இலக்காக இல்லாமல் பயங்கரவாதிகள் மட்டுமே இந்தியாவின் தாக்குதலில் குறிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் நேற்று பொது மக்கள் மற்றும் ராணுவ தளங்களை நோக்கி ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி பதற்றத்தை அதிகரித்துள்ளது. அத்துடன், தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால், பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறல் நடவடிக்கைக்கும் பதிலடி அளிக்கப்படும் என இந்தியா எச்சரித்துள்ளது.

இந்த பதற்றமான சூழலில் பிரதமர் மோடி தனது இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முப்படை தலைமை தளபதி, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்தும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தற்போதுள்ள சூழ்நிலை குறித்து ஆயுதப்படையை சேர்ந்த முன்னாள்வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர்களின் கருத்துகளை கேட்டறிந்துள்ளார். அத்துடன், இந்த கூட்டத்தில், முப்படைகளின் முன்னாள் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Prime Minister Modi consults with the three service commanders