நடிகர் ஹரிஷ் கல்யாண்- நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை. பிரபல ரியாலிட்டி ஷோ ஆன பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலம் தமிழா மக்களின் மத்தியில் மிக பிரபலமானார். 

பின்னர் அவர் நடிப்பில் வெளியான பாருங்கள் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது. சபிப்பதில் வெளியான லப்பர் பந்து, பார்க்கிங் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், பாராட்டுகளையும் அவருக்கு பெற்றுத் தந்தது.

கடந்தாண்டு வெளிவந்த டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது லோக்கல் ரேப்பர்களின் வாழிக்கையை மையமாக வைத்து உருவாகும் 'தாஷமக்கான்' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பணியாற்றி வருகிறார். ஹரிஷ் கல்யாணுக்கும், நர்மதா உதயகுமார் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.


இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளதாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"எனது மனைவி நர்மதாவிற்கும் எனக்கும் இன்று (02.03.2026) பெண் குழந்தை பிறந்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாயும் சேயும் நலமாக உள்ளனர். எங்களது வாழ்வின் இந்த அழகான புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இவ்வேளையில், எங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் காட்டிய அன்பு மற்றும் ஆசிகளுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

உங்களது தொடர்ச்சியான ஆதரவிற்கும், கனிவிற்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் நமசிவாய" எனக் குறிப்பிட்டுள்ளார்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Harish Kalyan becomes father to a baby girl


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->