மகனுக்கு துப்பாக்கி பரிசளித்த தாய்; விளைவாக 4 பேரை சுட்டுக்கொன்ற 16 வயது சிறுவன்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் உள்ள சில்வர் ரயில் தொடக்கப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை (அக். 15) 16 வயது சிறுவன் கிரிஃபின் ஜே ஜான் என்பவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 03 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் என 04 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அங்கு சென்ற கெய்லப் கியாமன்கோ (வயது 36) எனும் நபர் துப்பாக்கி சூடு நடத்திய சிறுவன் கிரிஃபின் ஜானை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கெய்லபின் 02 மகள்களும் தாக்குதல் நடைபெற்ற பள்ளியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டு சுட்டுக்கொல்லப்பட்ட கிரிஃபினுக்கு அவரது தாயாரான ஷான்டை நிக்கர்சன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுவனின் இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் மன அழுத்தம் காரணமா..? அல்லது இனவெறித் தாக்குதலா..? என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் 2026 ஆம் ஆண்டு (நடப்பாண்டு) துப்பாக்கிச் சூடு மூலம் நடத்தப்பட்ட 28 வது படுகொலை என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In the United States a mother gifted a gun to her 16 yearold son who went on to shoot and kill four peopl


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->