நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்திய 3 பேர் நேபாளத்திற்கு தப்பியோட இருந்த நிலையில் கைது..! - Seithipunal
Seithipunal


நேற்று போலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது மும்பையில் துப்பாக்கி சூடு நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேபாளுக்கு தப்பி ஓட முயன்ற நிலையில், இன்று ராஜஸ்தான் காவல்துறையிடம் சிக்கியுள்ளனர்.

மும்பை காவல்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், ராஜஸ்தானின் கோட்டா மாநகர காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அந்த மூன்று பேரும் கோட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டா காவல்துறையினர் வெறும் 15 நிமிடங்களுக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களைக் கைது செய்துள்ளனர்.

மூன்று பேரும் புனே-ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் டெல்லி வழியாக நேபாளத்திற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் பயணித்த ரயிலில் கோட்டா காவல்துறையினர் அதன் ரயில் நிலையத்திற்கு காலை 10.00 மணிக்கு விரைந்த நிலையில், அங்கு வந்த ரயிலில் இருந்து மூன்று பேரையும் எளிதாகப் பிடித்துள்ளனர்.

இந்தத் தகவலை தெரிவித்த கோட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஜஸ்வினி கவுதம் தெரிவித்துள்ளதாவது;

மும்பையில் தாக்குதல் நடத்திய பிறகு, அந்த மூன்று பேரும் உடனடியாக புனே-ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் ஏறித் தப்பிச் சென்றனர். அவர்கள் கோட்டாவை வந்தடையப் போகிறார்கள் என்ற தகவலை மும்பை காவல்துறை, கோட்டா காவல்துறையிடம் தெரிவித்தது. இதனால், உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், ரயிலில் 15 நிமிட சோதனையை மேற்கொண்டு மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று பேரும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், அவர்கள் முதலில் ஜெய்ப்பூருக்கும், அங்கிருந்து டெல்லிக்கும், இறுதியாக நேபாளத்திற்கும் செல்லத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்கள் நேபாளம் செல்வதற்கு முன்பாகவே அவர்கள்  பிடிபட்டுள்ளதாகவும், பின்னர் அவர்கள் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

இந்த மூவரும் பிரபல சர்வதேச குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டிட் என்பவரால் பணியமர்த்தப்பட்டவர்கள். இவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த ரேஹான் (எ) சுக்கா மற்றும் பிஹாரைச் சேர்ந்த ஹிருத்திக் குர்மி ஆகியோர் ஆவர்.

இதில், குர்மி, நீண்டகாலமாக மும்பையில் வசித்து வந்தவர் என்றும், மூன்றாவது நபர் ஒரு சிறுவர் ஆவார். இவர்களில் இருவர் டைகர் ஷெராபின் கார் மீது துப்பாக்கியால் சுட்டவர்கள் என்று கூறப்பட்டுகிறது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டிட், டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்த ஹரியானாவைச் சேர்ந்த ரேஹானுக்கு ஒப்பந்தம் வழங்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரேஹான் மற்ற இருவரை வேலைக்கு அமர்த்த, அவர்கள் இருவரும் டைகர் ஷெராபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த மூன்று பேரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கோட்டா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர், மூவரும் மும்பைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three individuals who opened fire at actor Tiger Shroff have been arrested while attempting to flee to Nepal


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->