துருவ் விக்ரமுடனான காதல் முறிவா? விமர்சனங்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் அதிரடி பதில்! - Seithipunal
Seithipunal


மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் இவர் நடிப்பில் வெளியான டிராகன், பைசன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதற்கிடையே நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுடன் அனுபமா காதலில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த உறவு குறித்த சர்ச்சைகளும், அனுபமாவின் சமீபத்திய கருத்துகளும் கவனம் பெற்றுள்ளன.

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அந்தப் படத்தின் வெற்றி சாய் பல்லவிக்கு பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கியதைப் போலவே, அனுபமாவுக்கும் தனி அடையாளத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் கலவையான வரவேற்பைப் பெற்றாலும், அனுபமாவுக்கு தென்னிந்தியத் திரையுலகில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. இதன் மூலம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.

தமிழில் கடைசியாக டிராகன், பைசன் ஆகிய படங்களில் நடித்த அனுபமா, இரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார். டிராகன் படத்தில் நவீன பெண்ணாகவும், பைசன் படத்தில் கிராமத்துப் பின்னணியைக் கொண்ட பெண்ணாகவும் நடித்திருந்தார். அவரது நடிப்பும் தோற்றமும் தமிழ் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றன. இதையடுத்து, மேலும் சில தமிழ்ப் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, பைசன் படத்தில் நடித்தபோது துருவ் விக்ரமுடன் அனுபமாவுக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாகச் செய்திகள் பரவின. இருவரும் ஒரே இடங்களுக்குச் சென்றதாகக் கூறப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகின. இதனால், தங்களது உறவை இருவரும் விரைவில் வெளிப்படையாக அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால், அனுபமாவின் சில சமூக வலைதளப் பதிவுகள் இருவருக்கும் இடையிலான உறவு முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பின.

தொடர்ந்து, ஒரு பேட்டியில் பேசிய அனுபமா, தான் முன்பு இருந்த உறவு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், அதில் பல்வேறு கஷ்டங்களைச் சந்தித்ததாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர் துருவ் விக்ரமின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்தக் கருத்துகள் அவருடனான உறவைப் பற்றியதாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இருவரின் உறவு குறித்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல.

இந்த நிலையில், தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “ஒரு திரைப்படம் நன்றாக ஓடவில்லை என்றால், அதுகுறித்த விமர்சனங்கள் வருவது முக்கியமானதுதான். அந்த விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் முன்வைத்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், திட்டமிட்டு பணம் பெற்றுக்கொண்டு விமர்சிப்பவர்களுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும்? சமூக வலைதளங்களில் வெளியாகும் அனைத்து விமர்சனங்களுக்கும் என்னால் எதிர்வினையாற்ற முடியாது. இது திமிர் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களின் வெற்றி, தோல்வி குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறிய அனுபமா, திட்டமிட்டு முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஒவ்வொன்றாகப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்ற தனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது இந்தக் கருத்துகள் தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A breakup with Dhruv Vikram Anupama Parameswaran gives a sharp response to the criticism


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->