பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: மேசைப்பந்தில் வெண்கலம் வென்ற பேபி சஹானா ரவிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் விஜய் வாழ்த்து
Para Asian Games Baby Sahana Ravi who won bronze table tennis gets 30 lakh incentive CM Vijay congratulates
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், மேசைப்பந்து விளையாட்டின் பெண்களுக்கான ஒன்பதாம் வகுப்புப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முதல்-அமைச்சர் விஜய் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது சாதனையைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"ஜப்பானில் நடைபெற்று வரும் ஐந்தாவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், மேசைப்பந்து விளையாட்டின் பெண்களுக்கான ஒன்பதாம் வகுப்புப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் இனிய வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் இந்தச் சிறப்பான சாதனையைப் படைத்துள்ள அவரைப் பாராட்டும் விதமாக, தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அவரது வெற்றி, தமிழகத்தில் உள்ள இளம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும்.
எதிர்காலத்திலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் அவர் தொடர்ந்து பெருமை சேர்க்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு முதல்-அமைச்சர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Para Asian Games Baby Sahana Ravi who won bronze table tennis gets 30 lakh incentive CM Vijay congratulates