கிம் ஜாங் கிம் ஜாங் உன் உயிருடன் உள்ளார்; இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வடகொரியா அரசு ..!
North Korean government puts an end to rumors by confirming that Kim Jong Un is alive
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளை சாவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தீயாய் பரவின. இது தற்போது வதந்தி எனவும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புதிய புகைப்படங்களை வடகொரிய அரசு வெளியிட்டுள்ளது.
42 வயதான கிம் ஜாங் உன் கடுமையான மூளை ரத்தப்போக்கு காரணமாகக் கோமா நிலைக்கு சென்று இறந்து விட்டதாகவும், அவரது உடல் சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆன்லைனில் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான ரோடோங் சின்முன் வெளியிட்டுள்ள புதிய படங்களில், கிம் ஜாங் உன் ஆடை மற்றும் காலணி கண்காட்சிக்குச் சென்று பார்வையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், அவர் ஒரு புகைப்படத்தில் பெண் ஒருவரால் காட்டப்படும் சிறிய இளஞ்சிவப்பு நிறக் காலணியை உற்று நோக்குவதும், மற்றொரு படத்தில் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருப்பதுமாக உள்ளது.
ஒரு புகைப்படத்தில் அவர் அருகில் உள்ள ஆடை ஒன்றைத் தொட்டுப் பார்ப்பது போன்ற புகைப்படமும் உள்ளன. இதனால், அவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும் வஞ்சுன் சீ என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுகள்தான் இந்த வதந்திகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், வாரிசுரிமை நெருக்கடியைக் கையாள சீனா தனது 9,000 வீரர்களைப் பியாங்யாங்கிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
அத்துடன், பெய்ஜிங்கில் இருந்து மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும் அவர் எந்தவித சாட்சியமுமின்றித் தொடர்ச்சியாகத் தகவல்களைப் பரப்பி வந்தார்.
இந்த வதந்திகளால் கிம் ஜாங் உனின் சகோதரியான கிம் யோ ஜாங் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டாரா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. எனினும், அரசு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இந்த ஊகங்களுக்குத் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
இதற்கு முன்னதாக கடந்த 2020-ஆம் ஆண்டிலும் கிம் ஜாங் உனின் உடல்நிலை குறித்துத் தவறான தகவல்கள் பரவியதும், பின்னர் அவர் பொதுவெளியில் தோன்றி அவற்றை பொய்யாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
North Korean government puts an end to rumors by confirming that Kim Jong Un is alive