''நாதக வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது''; தமிழிசை செளந்தரராஜன்..! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட   கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது:

பெண்கள் அரசியலுக்கு வருவதே சிரமமாக உள்ள காலகட்டத்தில், எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என  குறிப்பிட்டுள்ளார்.

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை, உடை மாற்றக்கூட அனுமதிக்காமல், இரவு உடையுடன் கைது செய்வது என்பது ஏற்கத்தக்கது அல்ல. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலில் ஆர்ப்பாட்டம், மறியல் என எதையும் செய்யலாம். அரசியலப்பு சட்டத்தில் அதற்கு இடமுண்டு என்று குறிப்பிட்டதோடு, அவ்வாறு செய்யும்பட்சத்தில் வழக்கு தொடர்ந்து ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டும் என்றும், அதை விட்டு கைது செய்வது கண்டிக்கத்தக்கது. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilisai states that the arrest of Naam Tamilar Katchi candidate Karthika is condemnable


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->