''தீபாவளி முடியும் வரை எந்தப் போராட்டமும் நடத்தப் போவதில்லை; பிரான்சில் நடப்பதை நாங்கள் செய்யவில்லை''; சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே..! - Seithipunal
Seithipunal


தங்களுடைய போராட்டங்களை (சிஜேபி) பிரான்ஸ், நேபாளம் மற்றும் வங்க தேசத்தில் நடந்த வன்முறைக் கலவரங்களையும் ஒப்பிடாதீர்கள் என்றும், தீபாவளி முடியும் வரை எந்தப் போராட்டமும் நடத்தப் போவதில்லை எனவும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி, ஜந்தர் மந்தருக்குள்  டெல்லி போலிசாரின் தடை உத்தரவை அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரைக் கைது செய்த காவல் துறை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அபிஜீத் தீப்கே அதில் பேசியுள்ளதாவது;

தீபாவளி முடியும் வரை எந்தப் போராட்டமும் நடத்தப் போவதில்லை என்றும், சில நாள்களுக்கு உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினருடனும் உங்கள் அன்புக்குரியவர்களுடனும் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் இருக்கும்போது சௌரவ் மற்றும் அசுதோஷ் ஆகியோரை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால், அவர்கள் இருவராலும் தங்கள் குடும்பத்தினருடன் இருக்க முடியாது. அதனால் அவர்கள்தான் நமது குடும்பம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். சௌரவ் தாஸும் அசுதோஷும் மகிழ்ச்சியாக சிறைக்குச் சென்றார்கள். பிரான்சில் நடப்பதை அவர்கள் செய்யவில்லை என்று பேசியுள்ளார்.

அத்துடன், எங்களுடைய போராட்டங்களையும் பிரான்ஸ், நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் நடந்த வன்முறைக் கலவரங்களையும் ஒப்பிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மகாத்மா காந்தி சிறைக்கு அனுப்பப்பட்டபோது, ​​அவர் சத்தியாகிரகம் செய்ததால் அமைதியாகச் சென்றார். அதே சத்தியாகிரகத்தைத்தான் சௌரவ் தாஸும் அசுதோஷும் செய்தார்கள். எங்களை சிறைக்கு அனுப்புவதால் நாங்கள் அச்சப்பட மாட்டோம் என்று அபிஜீத் தீப்கே அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CJP founder Abhijit Dipke says no protests will be held until Diwali concludes


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->