'இஸ்ரேலுடன் காட்டிய நிலைப்பாட்டிற்கும், உண்மைக்காக நின்றதற்தற்காக பிரதமர் மோடிக்கு நன்றி'; இஸ்ரேல் பிரதமர் பிரத்யேக பேட்டி..!
Israeli Prime Minister Netanyahu thanks his good friend Indian Prime Minister Modi for standing with Israel
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரபல ஆங்கில செய்தி சேனல் என்.டி.டி.வி.க்கு, பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின் போது அவர், ஈரான் தாக்குதலால் சேதம் அடைந்த கட்டிட இடிபாடுகளில் பலத்த பாதுகாப்பு காவலர்களுக்கு மத்தியில் நடந்தவாறு பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்; நான் எங்களுடைய சிறந்த நண்பர் இந்திய பிரதமர் மோடியுடன் நேற்று நீண்ட நேரம் பேசினேன். ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் அவர் காட்டிய நிலைப்பாட்டிற்கும், உண்மைக்காக நின்றதற்கும், இந்திய மக்களின் மகத்தான நட்புக்கும் அவருக்கு நன்றி தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர்கள் (இந்தியர்கள்) இஸ்ரேலில் மிகவும் போற்றப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மோடியுடனான உரையாடலின் விவரங்களுக்குள் நான் செல்லமாட்டேன். என்று குறிப்பிட்டுள்ளதோடு, ஆனால் நான் அவருடன் பேசியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Israeli Prime Minister Netanyahu thanks his good friend Indian Prime Minister Modi for standing with Israel