சூர்யாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு...! சூர்யா 46 டைட்டில் ரிலீஸ்...! - புதிய அப்டேட் கண்டு ரசிகர்கள் கொண்டாட்டம்
Suriyas next action announcement Suriya 46 title release Fans celebrate after seeing new update
நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 46வது திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு விஸ்வநாத் அன்ட் சன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுடன் ராதிகா சரத்குமார்,ரவீனா டான்டன், மமிதா பைஜூ, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்ள, எடிட்டிங் பணிகளை நவீன் நூலி கவனிக்கிறார்.மேலும், 2005ஆம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படத்தில் சூர்யா நடித்த சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போலவே, இந்தப் படத்திலும் வலுவான மற்றும் தாக்கமிக்க கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவார் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் “விஸ்வநாத் அன்ட் சன்ஸ்” திரைப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Suriyas next action announcement Suriya 46 title release Fans celebrate after seeing new update